கன்னியாகுமரி ஆக, 26
குலசேகரத்தில் மார்க்சிஸ்ட் மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு எடுத்துள்ள முடிவை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குலசேகரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் குலசேகரம் வட்டார செயலாளர் விஸ்வம்பரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ரவி, வட்டார குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மல்லிகா, சுபாஷ் கென்னடி, வட்டார குழு உறுப்பினர்கள் ஜூடஸ்குமார், ஸ்ரீகுமார், திருநந்திக்கரை கூட்டுறவுச் சங்க தலைவர் சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்