சென்னை பிப், 8
தமிழ்நாடு கர்நாடகா அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை 2024 டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டிகள் 9-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ரசிகர்கள் சி, டி, இ ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பார்க்கலாம் என்றும், நான்காவது நுழைவாயில் வழியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.