சென்னை பிப், 4
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 11-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் 14 நாடுகள் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க்கிறார்கள். இதில் ஒற்றையர் பிரிவில் 32 வீரர்களும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் களமிறங்குகின்றன, சென்னையில் இப்போட்டி நடத்தப்படுவது இது ஆறாவது முறையாகும். இப்போட்டியின் மொத்த பரிசு தொகை 1.10 கோடி ஆகும்.