ராமநாதபுரம் ஜன, 2
இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது.
மூன்று டி20 போட்டியும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் இரு அணிகளும் விளையாடினார்கள். டிசம்பர் 25, 26, 27 நடைபெற்ற டி20 போட்டியை 2-1 கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.
டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்த தொடரில் தமிழகத்திலிருந்து டி20 போட்டிக்கு திருப்பூர் சாகுல் ஹமீதும், டெஸ்ட் போட்டிக்கு தஞ்சாவூரில் இருந்து பாலசுந்தர் ஆகிய இரண்டு வீரர்களும் இந்திய அணிக்காக விளையாடினார்கள்.
இந்த இரண்டு தொடருக்கும் தமிழகத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி செயல்பட்டார்.
ஜஹாங்கிர் ஆரூஸி.
மாவட்ட நிருபர்.