கோவா டிச, 30
கோவாவில் நடந்த 37வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 20 வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் 43 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். இவர்களில் தடகளத்தில் ஒன்பது பேர் பளுதூக்குதலில் ஏழு பேர் உட்பட 20க்கும் மேற்பட்ட வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.