அகமதாபாத் நவ, 19
இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்காக மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி போட்டியை காண பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மைதானத்திற்கு வர உள்ளனர். இதனால் போட்டி நடைபெறும் இடம் முழுவதையும் மத்திய அரசு காவல் படையினர் கண்காணித்து வருகின்றனர்.