சென்னை நவ, 19
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டியை நேரலையில் காண முக்கிய இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நேரலையில் ஒளிபரப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.