அகமதாபாத் நவ, 18
அகமதாபாத் 2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் நாளை உதயமாகப் போகிறது. போட்டியை காண பிரதமர் திரை பிரபலங்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர் என பலரும் வருகை தர உள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் தடபுலாக நடந்து வருவதால் நாளை இந்தியாவுக்கு இன்னொரு தீபாவளி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.