கர்நாடகா நவ, 19
தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்துள்ளார். மத்திய பிரதேசம் தேர்தலில் இதே போல் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.