உத்திரப் பிரதேசம் நவ, 19
உத்திரப்பிரதேசத்தில் ஹலால் தர சான்று பெற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி விநியோகம் விற்பனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனை மீறி செயல்படும் தனிநபர்கள் நிறுவனத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் போலி ஹலால் தர சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சில நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உத்திரப் பிரதேசத்தில் இஸ்லாமிய மக்கள் மீது இம்மாநில அரசு அடக்கு முறையை கையாண்டு வரும் நிலையில் தற்போது ஒரு தனி மனிதனின் உணவு முறையில் கூட கட்டுப்பாடு விதிப்பது அம்மாநில அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை குறித்து மத்திய பிரதேச பகுதி இஸ்லாமிய பொதுமக்கள் கூறியதாவது,
“கடந்த சில வருடங்களாகவே எங்கள் மாநில அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உத்திரபிரதேசம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் எங்களின் (இஸ்லாமிய) வழிபாடு, உடை விவகாரம் என அனைத்திலும் அடக்குமுறை கையாளப்பட்டு வருகிறது. தற்போது எங்களின் உணவு விதிமுறைகள் கூட கட்டுப்பாடு விதிப்பது மிகவும் மோசமான நிலையில் அரசு செயல்படுகிறது என்பதை அப்பட்டமாக சுட்டிக் காட்டுகிறது. இந்த அடக்குமுறையின் பிரதிபலிப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வெளிவரும் என எதிர்பார்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும் இம்மாநில அரசுடன் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளும், இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவ மக்களிடையே கையாளப்படும் இந்த அடக்குமுறை நடவடிக்கை சற்று யோசிக்க வைத்துள்ளது. இதன் பிரதிபலிப்பு நிச்சயமாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெளிப்படும் என்பது ஐயமின்றி தெளிவாகிறது.
மேலும் குறிப்பாக தமிழ்நாடு இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருக்கும் மாநிலமாகவும், அதிகமான பகுதிகளில் அவர்களின் கணிசமான வாக்குகள் தேர்தலின் வெற்றியை முடிவு செய்யும் வண்ணம் உள்ளது. எனவே பிற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பாதிப்பை எதிர்கொள்ளும்போது, தமிழகத்திலும் அந்த பிரதான கட்சியுடன் கூட்டணி வைக்கும் முக்கிய கட்சிகளும் இந்த எதிர்ப்பை சந்திக்க கூடும். இதனால் இவர்களுக்கு பெருமளவில் வாக்கு இழப்பு ஏற்பட்டு வெற்றி வாய்ப்பு இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.