தென்னாப்பிரிக்கா நவ, 5
கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். தென்னாப்பிரிக்காவுடன் சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்து தனது பிறந்த நாளில் புதிய சாதனையை படைத்தார். அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் குவிந்து வரும் நிலையில் விராட் கோலியின் பிறந்த நாள் பரிசாக தங்கம் முலாம் பூசப்பட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் பரிசளித்துள்ளது.