புதுடெல்லி நவ, 11
இந்திய ரசிகர்களின் அன்பு திக்கு முக்காட வைத்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி தெரிவித்தார். மேலும் கூறிய அவர், ஒவ்வொரு போட்டியிலும் இந்திய ரசிகர்கள் பெரும் ஊக்கத்தை அளித்தனர். களத்தில் மட்டுமல்ல வெளியேயும் எங்களை நெகழ வைத்தனர். வெளியே சென்ற போது டாக்சி டிரைவர் கூட என்னிடம் பணம் வாங்கவில்லை இந்திய ரசிகர்களுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் என்றார்.