மும்பை நவ, 2
இந்தியா-ஸ்ரீலங்கா இடையிலான உலகக் கோப்பை போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வென்றதன் காரணமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தை பிடித்து விடும். அதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. ஒரு தோல்வி கூட அடையாது இந்திய அணி இன்று ஏழாவது வெற்றியை பதிவு செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.