புதுடெல்லி நவ, 4
2026 உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பங்கேற்கும் இந்திய அணியின் உத்தேச அணி பட்டியல் வெளியாகி உள்ளது. ஆசிய அணிகளுக்கான தகுதி சுற்றின், இரண்டாவது சுற்று போட்டிகள் நவம்பர் 16ல் தொடங்குகின்றன. அப்போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் சுனில் செத்ரி, குர்பிரீத் சிங் சாந்து, அம்ரிந்தர், ஜிங்கன், அனிருத் தபா, மன்விர், விக்ரம் சிங் உள்ளிட்ட 28 முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.