புதுடெல்லி நவ, 4
டாடா, வேதாந்தா நிறுவனங்களை தொடர்ந்து L&T நிறுவனமும் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ சங்கரராமன் 40 நானோமீட்டர் அளவில் செமி கண்டக்டர் சிப் வடிவமைப்பில் ஈடுபடும் வகையில் விநியோக சங்கிலியில் இறங்க துணை நிறுவனம் ஒன்றை உருவாக்க நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ₹830 கோடி முதலீடு செய்ய உள்ளது என்றார்.