கொல்கத்தா நவ, 5
விராட் கோலிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்த நாளன்று எங்கள் மண்ணில் நீங்கள் கலந்து கொள்ள இருக்கும் போட்டி வரலாற்று சிறப்புமிக்கதாய் அமைய வாழ்த்துவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.