உத்திரப் பிரதேசம் நவ, 5
சமீபத்தில் இந்தியாவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த வரிசையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.6 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அயோத்திக்கு வடக்கே 215 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.