புதுடெல்லி நவ, 3
டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் கடும் காற்று மாசு பிரச்சினை காரணமாக காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. மாசு பாதிப்பு காரணமாக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு நடைபெறும் 2023 உலகக்கோப்பை ஆட்டங்களின் போது பட்டாசு வெடிப்பதற்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது. டெல்லியில் ஒரு ஆட்டமும் மும்பையில் மூன்று ஆட்டங்களும் நடைபெற உள்ளது நிலையில் இந்த உத்தரவை பிசிசிஐ பிறப்பித்துள்ளது.