லக்னோ அக், 29
2023 உலக கோப்பை தொடரின் இன்றைய லீப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. லக்னோவில் மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தோல்வியின்றி தொடர் வெற்றிகளை சந்தித்த இந்தியா, ஆறாவது வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேற காத்திருக்கிறது. களம் கண்ட ஐந்து போட்டியிலும் வெற்றி பெற்று பத்து புள்ளியுடன் உள்ள இந்தியா இன்றைய ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறலாம்.