புதுடெல்லி அக், 26
நேற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் வெற்றி மூலம் ஒரு நாள் போட்டியில் 600 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதுவரை 991 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அணி இந்த சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை தொடர்ந்து 552 வெற்றிகளுடன் இந்தியாவும், 510 வெற்றிகளுடன் பாகிஸ்தானும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.