கோவா அக், 26
கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து 446 பேர் கொண்ட குழு சென்றது. இன்று மாலை 6.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் விளையாட்டுப் போட்டியில் 43 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.