புதுடெல்லி அக், 12
விராட் கோலி நல்ல குணம் கொண்ட சிறந்த வீரர் என்று ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-கக் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுவரை களத்தில் நடந்த அனைத்தையும் பெரிதாக்கிவிட்டனர். வெளியில் எதுவுமில்லை. தற்போது கை கொடுத்த நாங்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டோம். டெல்லி அவருடைய சொந்த ஊர் என்பதால் ரசிகர்கள் கோலி கோலி என்று கூச்சலிட்டார்கள் என்று நவீன்-உல்-ஹக் கூறினார்.