பாகிஸ்தான் செப், 27
தங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத இந்திய மைதானங்களில் விளையாடுவதில் கவலை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா புறப்படும் முன் பேசிய அவர், வீரர்கள் அனைவரும் அனைத்து சூழல் மற்றும் நாடுகளில் விளையாட தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்திய மைதானங்களில் தகவல்களை திரட்டி உள்ளதாகவும் பாபர் அசாம் கூறினார்.