ஆஸ்திரேலியா செப், 25
உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், அந்த இரண்டு ஆட்டங்களிலுமே ஆஸ்திரேலிய அணி வாஷ் அவுட் ஆனது. முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 276 ரன்கள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.