நெல்லை ஜூலை, 9
டிஎன்பிஎல் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கோவை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது. புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த திண்டுக்கல், நெல்லை அணிகள் நாளை மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஜூலை 12ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் கோவை அணியுடன் மோதும்.