சென்னை ஜூலை, 9
முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் சென்னை மாவட்டம் 19 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 33 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 11 பதக்கங்களுடன் திருவள்ளூர் மாவட்டம் இரண்டாவது இடத்திலும் 10 பதக்கங்களுடன் திருநெல்வேலி மாவட்டம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.