புதுடெல்லி மே, 9
ஐபிஎல் தொடரிலிருந்து தோனி இந்த ஆண்டு ஓய்வு பெற மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தோனி இன்னும் ஒரு கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்க வென்று கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளார். அதே சமயம் அவர் நடப்பு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற மாட்டார் அடுத்த ஆண்டும் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.