சென்னை மார்ச், 27
சென்னையில் ஏப்ரல் 3 ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. டிக்கெட் விலை 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. CSK அணி சென்னையில் ஏழு லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது.