சென்னை மார்ச், 26
கிரிக்கெட் மைதானத்திற்குள் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதி இல்லை என சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 31 ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மைதானத்திற்குள் ஹெல்மெட், லேப்டாப், புகையிலை மற்றும் மதுபான பொருட்கள் போன்றவற்றை எடுத்து வர அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.