துபாய் மார்ச், 24
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை தவிர, மற்ற நாடுகளை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட முடியாது என்று கூறிய காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா விளையாடும் போட்டிகள் இங்கிலாந்து அல்லது இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.