சென்னை மார்ச் 23,
தமிழ்நாடு முழுவதும் இன்று விடுமுறை எடுத்து வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலியிடங்களை நிரப்ப, துணை ஆட்சியர் பட்டியலை வெளியிடக்கோரி அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அரசின் முக்கிய பணிகள் என்று முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஊதிய உயர்வு உள்ளிட்டவை அமல்படுத்த கோரி, சென்னையில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.