விருதுநகர் மார்ச், 14
சூலக்கரையில் கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்களையும், 3 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, அருப்புக்கோட்டை யூனியன் தலைவர் சசிகலா, வட்டாட்சியர் அறிவழகன், வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.