விருதுநகர் மார்ச், 15
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை காண அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சிவகாசி மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கு முகாமில் பங்கேற்று பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் நேரம் வேகமாக வந்துள்ளது. உரிய அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று உறுதி கூறியுள்ளார் வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளது.