விருதுநகர் ஜன, 19
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இருக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக் கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். தற்போது தை பிறந்திருப்பதாலும், வியாழன் பிரதோஷம், சனி அமாவாசை வருவதாலும் கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். ஜனவரி 22 முதல் 25 வரை கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.