விருதுநகர் ஜன, 16
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.1.14 கோடி மதிப்பில் தினசரி சந்தைக்கான புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 24 கடை களுடன் கூடிய தினசரி சந்தைக்கான வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக சர்க்கரை குளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் நாட்டு விழாவில் நகராட்சி பொறியாளர் தங்கப்பாண்டியன், ஒப்பந்ததாரர் குழந்தைவேலு, கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.