ராஜபாளையம் ஜன, 10
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறை, காவலர் வாய்ஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதையொட்டி ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேருசிலையில் இருந்து இருசக்கர வாக னங்களில் போலீசார், சமூக ஆர்வலர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் அணிவகுத்து சென்றனர். வழிநெடுகிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முடிவில் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டியும் நடைபெற்றது.இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.