விருதுநகர் ஜன, 8
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 28 ம்தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.