விருதுநகர் ஜன, 6
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது.
இதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 15 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதத்தில் பணிகள் நிறைவடைந்தது. முதலாவது அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விருது நகரில் நடந்த புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. அதை ஏராளமானோர் பார்வையிட்டனர். புத்தக கண்காட்சியில் சில பொருட்கள் மட்டுமே பார்வைக்கு வைக்கப்பட்டன.
2-வது கட்ட அகழாய்வு பணி ஜனவரி மாதத்தில் தொடங்கப்படலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இன்னும் 2-வது கட்ட பணி தொடங்கப்படாமல் உள்ளது. எப்போது தொடங்கும் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை. 2-வது கட்டப்பணி தொடங்கினால் மேலும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் கிடைப்பதுடன் பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.