கன்னியாகுமரி ஜன, 17
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் விவேகானந்தகேந்திர நிர்வாகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த கோசாலையில் உள்ள 50 பசு மாடுகளுக்கும் கழுத்தில் பூமாலை அணிவிக்கப்பட்டு நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகம் இட்டு கொம்பில் பட்டு துணியி னால் பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதன்பிறகு கோசாலையின் மத்தி யில்அமைக்கப்பட்டுஇருந்த கோமாதாவுடன் கூடிய கிருஷ்ணபகவான் சிலை முன்புகாய், கனிகள் மற்றும் பழவகைகள் படைக்கப்பட்டு பொங்கல் பானைகள் வைத்து பசு மாடுகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கேந்திர துணைத் தலைவர் அனுமந்தராவ், மூத்த ஆயுட்கால ஊழியர் அங்கி ராஸ், கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்ட செயலாளர் வாசுதேவ், கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன், கன்னியாகுமரி லாட்ஜ் உரிமையாளர் சங்க நிர்வாகி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் பிரசாதமான சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல் போன்றவை வழங்கப்பட்டது.