கன்னியாகுமரி ஜன, 9
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வருகிற 12 ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோ சிப்பதற்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் சுயம்பு லிங்கம், தெற்கு வட்டாரத் தலைவர் சுயம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.