திருவள்ளூர் ஜன, 8
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதைப் பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையம் ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் அம்மையங்களில் அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணசுவாமி சந்திரன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், தலைமை குடிமை மருத்துவர் விஜயராஜ், மருத்துவர்கள், செவிலியர்கள், திருநங்கைகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.