திருவள்ளூர் ஜூன், 8
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் ஏற்கனவே 3 முறை அரசு மண் குவாரிக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக மண் எடுத்து ஆழப்படுத்தினர்.
இதனால் ஏரியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் விவசாய நிலங்களும் போதிய நீர் பாசன வசதி இல்லாமல் 200 ஏக்கர் விவசாய நிலம் வீட்டு மனைகளாக ஆக்கப்பட்டது. எனவே திருப்பாச்சூர் கிராமத்தில் அரசு சவுடு மண்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது என ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.