திருவள்ளூர் ஜன, 6
திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என, 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குடிநீர் இணைப்பு கட்டணம் செலுத்தியிருக்கிறார்களா, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் செலுத்தியிருக்கிறார்களா, குடிநீர் வரி, சொத்து வரி ஆகியவற்றை செலுத்தியிருக்கிறார்களா என்பது குறித்து கேட்டறிந்தார். ஒரு வாரம் ‘கெடு’ அப்போது வரி செலுத்தாதவர்கள் ஒரு வாரத்திற்குள் வரியை செலுத்த வேண்டும் என கெடு விதித்தார். அதேபோல் கடை வைத்திருப்பவர்கள் தொழில் உரிமம் சான்றிதழ்கள் வைத்திருக்கிறார்களா, நகராட்சிக்கு தொழில் வரி செலுத்தியிருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் சுதர்சனம், பொருத்துனர் உதயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.