திருவள்ளூர் டிச, 31
மீஞ்சூர் வட்டாரத்தில் அடங்கிய திருவெள்ளவாயல், கோளூர், பனப்பாக்கம், சோம்பட்டு, சிறுலப்பாக்கம், மெதுர், வேலூர், தட பெரும்பாக்கம், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றி 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் தண்டு, கணுப்பகுதி, கதிர், பூஞ்சைகளால் தாக்கப்பட்டு வெண்மை நிறத்தில் காணப்படுவதாக வேளாண்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் விஜயசாந்தி, தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் கவிதா, மீஞ்சூர் வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி பாபு, ஆகியோர் அடங்கிய குழுவினர் மீஞ்சூர் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளிடம் பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.