திருவள்ளூர் டிச, 27
மீஞ்சூர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை செய்தனர்.
இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் செல்லியம்மன் கோயில் அருகே முட்புதரில் 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு ரயிலில் கடத்த இருப்பதாக மீஞ்சூர் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவிக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல் துறையினர் விரைந்து சென்று அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த தயாராக வைத்திருந்த 2500 கிலோ அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.