திருவள்ளூர் டிச, 25
மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை வளாகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் வளாகம் அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிலை வடிவமைக்கும் பணியினை மீஞ்சூர் அடுத்த புதுப்பேட்டில் சிற்பி தீன தயாளன் செய்து வருகிறார்.
8½ அடி உயரம் கொண்ட வெண்கல சிலையானது 550 கிலோ எடை கொண்டதாகவும் இதன் முதற்கட்ட களிமண் வார்ப்பு பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு சிற்பியிடம் கேட்டறிந்தார்.