விருதுநகர் நவ, 29
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய வட்டாரங்களில் விருதுநகர் மாவட்ட திட்டப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில், இணை இயக்குநர் உத்தண்டராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சங்கர் நாராயணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் கோவில் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.