விருதுநகர் நவ, 27
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நடந்தது. தங்கப்பாண்டியன் சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் கற்பகம்மாள் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், தங்கப்பான், சீதாராமன், வைரவன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.