திருவள்ளூர் நவ, 27
கும்மிடிப்பூண்டி அருகே ஏடூரில் உள்ள டாக்டர் செரியன் மெடிவில்லா வளாகத்தில் டாக்டர் கே.எம்.செரியன் எஜுகேஷனல் சொசைட்டி மற்றும் டாக்டர் கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் சார்பில் அமைக்கப்பட உள்ள தி ஸ்டடி குளோபல் கல்வி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதன் நிறுவன தலைவர் செரியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் மருத்துவ குணம் வாய்ந்த மரக்கன்றுகளை நட்டார்.
இந்நிகழ்வில் மொரீசியஸ் நாட்டின் கல்வி மற்றும் கலை கலாச்சார துறை அமைச்சரும், யுனெஸ்கோவில் ஆலோசகராகவும் உள்ள ஆறுமுகம் பரசுராமன், நிறுவன துணை தலைவர்கள் சந்தியா செரியன், சஞ்சய் செரியன் ஆகியோருடன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி தலைவர்கள் எளாவூர் வள்ளி முருகேசன், ஏடூர் ரேவதி பங்கேற்றனர்.