திருவள்ளூர் நவ, 25
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தலைவர் சிவராமன், நகர இளைஞரணி செயலாளர் மில்லர், முன்னாள் பேரூர் கழக செயலாளர் லெனின், மாவட்ட பிரதிநிதி சசிகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆர்பார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார் ஆனந்தகுமார் சிறப்புரையாற்றினர்.